மேலும் செய்திகள்
பேனர் வைத்த தகராறில் வாலிபர் அடித்து கொலை
14-Jun-2025
தரமணி,:மது போதையில் மயங்கிய தம்பி குறித்து தட்டிக்கேட்ட அண்ணனை, பீர் பாட்டிலால் தாக்கிய நண்பனை, போலீசார் கைது செய்தனர்.பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நிரஞ்சன்குமார், 30. பெருங்குடியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். இவரது தம்பி சோனுகுமார், 28.நேற்று முன்தினம், ஓ.எம்.ஆர்., - எஸ்.ஆர்.பி.,டூல்ஸ் அருகே, சோனுகுமார் தன் நண்பர்களுடன் மது அருந்தினார். அதீத போதையானதும் சோனுகுமார் மயங்கினார்.நீண்ட நேரமாகியும் தம்பியை காணாததால், அவரை தேடி வந்த நிரஞ்சன்குமார், மயங்கி கிடந்த தம்பியை கண்டதும், அது குறித்து நண்பர்களிடம் கேட்டார்.இதில் ஏற்பட்ட தகராறில், திருவான்மியூரை சேர்ந்த ஜெயகுமார், 28, என்பவர், பீர் பாட்டிலால் நிரஞ்சன் குமார் முகத்தில் தாக்கினார். பலத்த காயமடைந்த நிரஞ்சன்குமார், அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின்படி, தரமணி போலீசார், நேற்று ஜெயகுமாரை கைது செய்தனர்.
14-Jun-2025