உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கழிவுநீர் ஓடையாக மாறிய கோவில் தெரு

கழிவுநீர் ஓடையாக மாறிய கோவில் தெரு

மணலி மண்டலம் 21வது வார்டு, ஜலகண்டமாரியம்மன் கோவில் தெருவில், ஒரு மாத காலமாக, சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடி, எதிரேயுள்ள வடிகாலில் சென்று விழுகிறது. இதன் காரணமாக, அச்சாலையில் பயணிக்கும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மற்றும் கால்நடைகள், கழிவுநீரை கடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இந்த கழிவுநீர் தனியார் இடம் ஒன்றில் இருந்து வெளியேறி வருகிறது. எனவே, குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள், சாலையில் மானாவாரியாக ஓடும் கழிவுநீர் பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை