உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டென்னிஸ் பால் கிரிக்கெட் சென்னை அணிகள் பங்கேற்பு

டென்னிஸ் பால் கிரிக்கெட் சென்னை அணிகள் பங்கேற்பு

சென்னை, தமிழ்நாடு டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்கம் சார்பில், மாநில அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி, இன்று துவங்கி, நாளை வரை நடக்கிறது.கோவை, மேட்டுபாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடக்கும் இப்போட்டிகளில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, இருபாலரிலும் தலா 26 அணிகள் பங்கேற்றுள்ளன.சென்னை அணிக்கான தேர்வு, விருகம்பாக்கம் ஆவிச்சி பள்ளியில் சமீபத்தில் நடந்தது. அதில், 17 வயது பிரிவில், தலா 14 வீரர், வீராங்கனையர் தேர்வாகினர். இந்த வீரர்கள், மாநில போட்டியில் இரு அணிகளாக பங்கேற்கின்றனர். இதற்காக நேற்று, சென்னை சென்ட்ரல் ரயிலில் நிலையத்தில் இருந்து கோவைக்கு புறப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை