உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாட்டுப்புற பாட்டின் அடிப்படை தாலாட்டு

நாட்டுப்புற பாட்டின் அடிப்படை தாலாட்டு

திருவொற்றியூர்: ''தமிழ் இலக்கியத்தின் அடிப்படை தாலாட்டு,'' என, புலவர் தமிழமுதன் பேசினார். திருவொற்றியூர் கிளை நுாலக வாசகர் வட்டம் சார்பில் நடந்த 98வது 'சிந்தனை சாரல்' நிகழ்ச்சியில் பங்கேற்ற, புலவர் தமிழமுதன் பேசியதாவது: நாட்டுப்புற பாட்டை யாரும் எழுதி வைத்து படிக்கவில்லை. தாலாட்டில் மட்டும் தான், பிறந்த கதை, வாழ்ந்த கதை, வாழ வந்த குடும்ப கதை, உடன் பிறந்தவர் கதை, எப்படி வாழ வேண்டும் என்பது குறித்த செய்திகள் அடங்கியிருக்கின்றன. படிக்காதவர்கள் தாலாட்டில் பயன்படுத்திய வார்த்தைகள் இன்றும் வியக்க வைக்கின்றன. பிள்ளை தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாக தாலாட்டு இருந்துள்ளது. உலகில் மிக உயர்ந்தவள் தாய் மட்டுமே. காரணம், மனிதன் சிறந்தவனாக வாழ்வதற்கு கருவியாக செயல்படும் அன்பை, முதலில் கற்றுக்கொடுப்பவரே அவர் தான். தாயை போற்றினால் உயர்வு நிச்சயம். நாட்டுப்புற பாட்டின் அடிப்படையான தாலாட்டு, இலக்கியத்தின் தாயூற்று. இவ்வாறு, அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், வாசகர் வட்ட நிர்வாகிகள் துரைராஜ், குரு சுப்பிரமணி, மதியழகன் மற்றும் நுாலகர் லதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை