| ADDED : மார் 04, 2024 01:14 AM
சென்னை:பல்கலை இடையிலான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில், நீளம் தாண்டுதலில் சென்னை டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி வீரர், தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்றார்.அசாம் மாநிலம் கவுகாத்தியில், பல்கலை இடையிலான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், கடந்த பிப். 19 துவங்கி 29ல் முடிந்தன.இந்தியாவின், 200க்கும் மேற்பட்ட பல்கலை அணிகள் இப் போட்டியில் பங்கேற்றன. மொத்தம் 20 விளையாட்டு பிரிவின் கீழ், 240 தங்கம், 240 வெள்ளி, 290 வெண்கலம் என, மொத்தம் 770 பதக்கங்களுக்காக 4500 வீரர்கள் களமிறங்கினர்.இதில், சென்னை பல்கலை சார்பில், நீளம் தாண்டும் போட்டியில், அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி மாணவர் விஷ்ணு பங்கேற்றார். தகுதிச் சுற்று போட்டிகளில் அசத்திய விஷ்ணு, இறுதிச் சுற்றில், 7.63 மீ., தூரம் தாண்டி, புதிய தேசிய சாதனையுடன், தங்கம் வென்று அசத்தினார்.