உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அபாய நிலையில் வடிகால் மூடி நெடுஞ்சாலை துறை அலட்சியம்

அபாய நிலையில் வடிகால் மூடி நெடுஞ்சாலை துறை அலட்சியம்

ஆயிரம்விளக்கு, ஆயிரம்விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகே அண்ணா சாலையில், சிதிலமடைந்துள்ள மழைநீர் வடிகால் மூடியை சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையை, நெடுஞ்சாலைத் துறையினர் பராமரித்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த மாதம் ஆயிரம்விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகே, அண்ணா சாலையில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் வடிகால் மூடி சிதிலமடைந்து, முற்றிலுமாக உடைந்தது.அதன் பிறகு, அதை சீரமைப்பதற்கான நடவடிக்கையை, நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொள்ளவில்லை. இதனால், அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைவதோடு, கார்களும் சேதமடைந்து வருகின்றன.இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், நெடுஞ்சாலைத் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இதை கண்காணித்து, மழைநீர் வடிகால் மூடியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ