உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயில் முன் பாய்ந்த செய்யாறு நபர்

ரயில் முன் பாய்ந்த செய்யாறு நபர்

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், 42. இவர், கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில், வெல்டிங் பிரிவில் பணியாற்றி வந்தார்.இவரது மனைவி, மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், நாகராஜ் சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில், அவர் கிண்டி ரயில் நிலையத்தில், 4வது நடைமேடை அருகே, நேற்று மதியம் நின்று கொண்டிருந்தார்.அப்போது, எழும்பூரில் இருந்து தாம்பரம் நோக்கி, விரைவு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் முன்பாக, நாகராஜ் திடீரென பாய்ந்தார். இதில் துாக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை