உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருடனை சுற்றிவளைத்த மக்கள்

திருடனை சுற்றிவளைத்த மக்கள்

அடையாறு:பைக் திருட முயன்ற வாலிபரை, பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.அடையாறு, மல்லிகைப்பூ நகரில் மெக்கானிக் கடை நடத்தி வருபவர் துரை, 51. நேற்று அதிகாலை, இவரது கடையில் சத்தம் கே ட்டுள்ளது. பகுதிமக்கள் பார்த்தபோது, கடையில் நிறுத்தப்பட்டிருந்த 'யமஹா' பைக்கின் லாக்கை உடைத்து ஒருவர் திருட முயன்றது தெரிய வந்தது.பகுதி மக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து, அடையாறு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், கண்ணகி நகரைச் சேர்ந்த அருண், 23, என தெரிந்தது. அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை