உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேருந்து கண்ணாடியை உடைத்தவர் கைது 

பேருந்து கண்ணாடியை உடைத்தவர் கைது 

எம்.கே.பி.நகர், சென்னை, செங்குன்றம், முனியப்பன் நகரை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 49; மாநகர பேருந்து நடத்துனர்.இவர் நேற்று செங்குன்றத்திலிருந்து வள்ளலார் நகரை நோக்கி செல்லும் தடம் எண் 57என் பேருந்தில் பணியில் இருந்தார்.அப்போது, வாலிபர் ஒருவர் பஸ் படிக்கட்டில் நின்றபடி வந்துள்ளார். அவரை ஹரிகிருஷ்ணன் உள்ளே வருமாறு கூறியதால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பின் சர்மா நகர் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென இறங்கிய வாலிபர் கல்லை எடுத்து பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பினார். எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடி, காந்தி நகரை சேர்ந்த சத்யநாராயணன், 24 என்பவரை கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ