உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருடர்கள் இருவரை துரத்தி பிடித்த போலீசார்

திருடர்கள் இருவரை துரத்தி பிடித்த போலீசார்

பம்மல், பம்மல் - பொழிச்சலுார் சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, இரண்டு மர்ம நபர்கள், ஜெராக்ஸ், லேப் உள்ளிட்ட நான்கு கடைகளை உடைத்து, பணம், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை திருடி, இருசக்கர வாகனத்தில் தப்பினர்.அப்போது, அவ்வழியாக ரோந்து சென்ற சங்கர் நகர் போலீசார், நள்ளிரவில் இருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனத்தில் செல்வதை பார்த்து, மடக்க முயன்றனர். போலீசாரை பார்த்ததும், மர்ம நபர்கள் வாகனத்தில் பறந்தனர்.போலீசாரும் விடாமல் துரத்தினர், இதில் ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் அங்கிருந்து தப்பினார். அவரையும் விரட்டிப் பிடித்தனர்.விசாரணையில், பரங்கிமலையைச் சேர்ந்த கவுதம், 24, ஆன்டர்சன் ஜான், 25, என்பது தெரியவந்தது. கடைகளை உடைத்து பணம், மடிக்கணினி ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ