உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின் கம்பி அறுந்து விழுந்தது

மின் கம்பி அறுந்து விழுந்தது

மின் கம்பி அறுந்து விழுந்ததுபோரூர் கார்டன் பேஸ் - 2 வானகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கொட்டும் மழையில், மின்கம்பம் ஒன்று பலத்த சத்தத்துடன் பட்டாசு போல் வெடித்து சிதறியது. மேலும், மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்தது. அப்பகுதியில் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.தி.நகர் ரங்கநாதன் தெரு அருகே, நடேசன் தெருவில் மின் கம்பி அறுந்து, தேங்கிய மழைநீரில் விழுந்து, தீப்பொறி சிதறின. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. மின் வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து சீர் செய்தனர். மேற்கு மாம்பலம், கோவிந்தன் சாலையில் தேங்கிய மழைநீரால், சாலையோரத்திலிருந்த மின் பகிர்மான பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை