உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்னை தாக்கிய ரவுடி சிக்கினார்

பெண்னை தாக்கிய ரவுடி சிக்கினார்

அண்ணா சதுக்கம், திருவல்லிக்கேணி, மாட்டாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கவுரி, 39. இவரது வீட்டின் அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவில், துணிகளை காய வைப்பது வழக்கம்.துணிகளை காய வைப்பது தொடர்பாக, அதே பகுதியில் வசிக்கும் பிரசாந்த், 32, என்பவருக்கும் இவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.நேற்று முன்தினம் மாலை, பிரசாந்த் மற்றும் அவரது தந்தை இருவரும், துணி காய வைக்க சென்ற கவுரியை அவதுாறாக தாக்கியுள்ளனர்.இதுகுறித்து புகாரின்படி, பிரசாந்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரசாந்த் மீது, 11 குற்ற வழக்குகள் உள்ளன. தலைமறைவான அவரது தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை