உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தண்ணீரில் தத்தளித்த தாம்பரம் மாநகராட்சி கால்வாய்களை துார்வாராததே காரணம்

தண்ணீரில் தத்தளித்த தாம்பரம் மாநகராட்சி கால்வாய்களை துார்வாராததே காரணம்

தாம்பரம், தாம்பரம் மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று பெய்த மழைநீர் தேங்கியது. பல்லாவரம் பான்ட்ஸ் சந்திப்பில், ஜி.எஸ்.டி., சாலையில் 3 அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்கியது. அவ்வழியாக சென்ற பல இருசக்கர வாகனங்கள், வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்தன. குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் அருகே ஜி.எஸ்.டி., சாலையில் தேங்கிய வெள்ளத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தாம்பரம் - முடிச்சூர் சாலையில் புறவழிச்சாலை சந்திப்பு, தாம்பரம் - வேளச்சேரி சாலையில் சேலையூர் ஆகிய இடங்களிலும், மழைநீர் தேங்கியது; வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து சென்றன. குரோம்பேட்டை கட்டபொம்மன் குறுக்கு தெருவில் வீடுகளுக்குள்ளேயும், நியுகாலனியில் பல தெருக்களில் முழங்கால் அளவிற்கும், மழைநீர் தேங்கியது. குரோம்பேட்டை ஓம் சக்தி நகர், செந்தில் நகர், நடேசன் நகர் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.பெருங்களத்துாரில், காமாட்சி நகர், சேகர் நகர், கார்த்திகேயன் நகர், பாலாஜி அவென்யூ, பாரதி அவென்யூ, பழைய பெருங்களத்துார், டி.கே.சி., சாலை, முத்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.இதில், பாரதி அவென்யூ, காமாட்சி நகர், சேகர் நகர் பகுதிகளில், குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.ஒவ்வொரு மழைக்கும், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் வெள்ளம் தேங்குவதற்கு, மழைநீர் கால்வாய்களை, அதிகாரிகள் முறையாக துார்வாரவில்லை எனவும், பெயருக்காகவே இப்பணியை செய்வதாகவும், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

உயிரியல் பூங்கா மூடல்

'பெஞ்சல் புயல் காரணமாக வண்டலுார் உயிரியல் பூங்கா இன்று மூடப்படுகிறது' என, பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி