மருந்தகத்தில் தி ருட்டு சிறுவன் கைது
சென்னை, ஆழ்வார் திருநகர், இந்திரா நகரை சேர்ந்தவர் காஜா அமினுதின், 64. புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள குளோப் மருந்தகத்தின் மேலாளர். கடந்த மாதம், 19ம் தேதி மருந்தகத்தை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாவிலிருந்த, 30 ஆயிரம் ரூபாயை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. வேப்பேரி காவல் நிலையத்தில் காஜா அமினுதின் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுவன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று சிறுவனை கைது செய்த போலீசார், அவனை சீர்திருத்தபள்ளியில் சேர்த்தனர். சிறுவன் மீது சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கானாத்துார் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.