உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாரம் தாங்காமல் சேஸ் உடைந்து சாய்ந்த லாரி

பாரம் தாங்காமல் சேஸ் உடைந்து சாய்ந்த லாரி

பல்லாவரம்: வேளச்சேரியில் சவுடு மண் ஏற்றிய லாரி, துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக, பல்லாவரம் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது. வேல்ஸ் சிக்னல் அருகே, பாரம் தாங்காமல், 'சேஸ்' உடைந்து, லாரி ஒரு புறமாக சாய்ந்தது. இதனால், பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். போக்குவரத்து காவல் துறையினர் வராததால், லாரி ஓட்டுநரே, அப்பகுதியில் உள்ள பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து, லாரியை துாக்கி நிறுத்தினார். தொடர்ந்து, அந்த லாரியில் இருந்த மண், மற்றொரு லாரிக்கு மாற்றப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி