உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆற்காடு சாலையில் மழைநீர் வடிகால்வாய் ரூ.108 கோடியில் கட்ட மாநகராட்சி பரிந்துரை பணியை யார் மேற்கொள்வதில் என நிலவுது குழப்பம்

ஆற்காடு சாலையில் மழைநீர் வடிகால்வாய் ரூ.108 கோடியில் கட்ட மாநகராட்சி பரிந்துரை பணியை யார் மேற்கொள்வதில் என நிலவுது குழப்பம்

போரூர்,குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, போரூர், கிண்டி, கோடம்பாக்கம், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளை, ஆற்காடு சாலை இணைக்கிறது.இச்சாலை வழியாக தினமும், லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மொத்தமுள்ள 8 கி.மீ., துார சாலையில் ஆங்காங்கே, 4 கி.மீ., துாரம் மிகவும் குறுகலாக இருந்தது.இதில், போரூர் முதல் வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார் திருநகர் வரையிலான சாலை, நெடுஞ்சாலை துறை பராமரிப்பிலும், ஆழ்வார்திருநகர் முதல் கோடம்பாக்கம் வரை உள்ள ஆற்காடு சாலை, மாநகராட்சி பராமரிப்பிலும் உள்ளது.சென்னையின் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில், முக்கிய சாலைகளை அகலப்படுத்த, சென்னை மாநகராட்சிக்கு, இரண்டாவது முழுமை திட்டத்தின் கீழ், 2008ல் சி.எம்.டி.ஏ., பரிந்துரை வழங்கியது.ஆனால், இதுவரை இச்சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. தற்போது, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. அதனால் அச்சாலை, அதன் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.ஆனால் மெட்ரோ ரயில் நிர்வாகம், தங்களுக்கு தேவையான அளவு மட்டுமே சாலையை விரிவாக்கம் செய்துள்ளது.இச்சாலையில், போரூர் முதல் ஆழ்வார் திருநகர் வரை, சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் இல்லை. இதனால் மழைக்காலத்தில், தண்ணீர் செல்ல வழியின்றி வளசரவாக்கம் மண்டலத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.அதேபோல், ஆழ்வார்திருநகர் முதல் வடபழனி வரை உள்ள மழைநீர் வடிகால்வாய்கள் சேதமடைந்துள்ளன.மழைநீர் தேங்கும் பிரச்னையை தீர்க்க, போரூர் சந்திப்பு முதல் வடபழனி வரை, ஆற்காடு சாலையின் இருபுறமும் வடிகால்வாய் அமைக்க, மாநகராட்சி சார்பில் 108 கோடி ரூபாயக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.ஆனால், மழைநீர் வடிகால்வாய் பணியை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொள்ளுமா அல்லது மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை மேற்கொள்ளுமா என்பதை, மாநகராட்சியோ, மெட்ரோ ரயில் நிர்வாகமே தெளிவுபடுத்தாமலே உள்ளது.ஆற்காடு சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டால், மழைக்காலத்தில் வளசரவாக்கம், போரூர், விருகம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதியில் மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ