உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருடன் கைது ஏழு பைக் பறிமுதல்

திருடன் கைது ஏழு பைக் பறிமுதல்

சென்னை :சென்னை சென்ட்ரல், மாதவரம் மற்றும் மீஞ்சூர் பகுதிகளில், பைக்குகள் அடிக்கடி காணாமல் போவதாக, போலீசாருக்கு புகார்கள் வந்தன. ராயபுரத்தைச் சேர்ந்த செல்வம், 53 என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், புளியந்தோப்பு போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம், பொன்னேரியை சேர்ந்த சதீஷ்குமார், 27 என்பவரை கைது செய்தனர். அவர், சென்னையில் பல்வேறு இடங்களில் பைக் திருடுவதையே தொழிலாக வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து மூன்று ஸ்பிளண்டர், மூன்று டியோ ஸ்கூட்டர் மற்றும் ஒரு பல்சர் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை