உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தினமலர் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் திருமுடிவாக்கம் அடுக்குமாடிவாசிகள் ஜாலி

தினமலர் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் திருமுடிவாக்கம் அடுக்குமாடிவாசிகள் ஜாலி

குன்றத்துார், 'தினமலர்' நாளிதழ் மற்றும் 'கிரேஸ் சூப்பர் மார்க்கெட்' சார்பில், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை ஒன்றிணைத்து, கார்னிவெல் -அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.இந்நிகழ்ச்சியை, 'சிம்ஸ் மருத்துவமனை, கிட்டீ பட்டீ, தனிஷ்க் ஜுவல்லரி, நிசான் ஆட்டோ ரிலே, மயில் மார்க் ஹோம் கேர் புரோடக்ட்ஸ், பூர்விகா' ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன.மக்களின் வரவேற்பையடுத்து, சென்னையில் பல்வேறு பிரபலமான அடுக்குமாடி குடியிருப்புகளில், இந்த நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், குன்றத்துார் அருகே திருமுடிவாக்கத்தில் உள்ள 'ராயல் கேஸ்டில்' அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று காலை முதல் மாலை வரை,'தினமலர் கார்னிவெல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' நிகழ்ச்சி, வெகு விமரிசையாக நடந்தது.இதில், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் குடும்பத்தினருடன் பங்கேற்று மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் கோலப்போட்டி, உறியடி, மினி மாரத்தான், பாட்டு, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. சிறுவர்கள் விளையாடுவதற்கு 'டாய்' ரயில், இயந்திர காளை, 'ஜம்பிங் பலுான்', கேலி சித்திரம், ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன.இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும், உற்சாகமாக பங்கேற்று மகிழ்ந்தனர். அனைத்துவித போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.குடியிருப்புவாசிகளுக்கிடையே நடந்த போட்டிகள் சிறப்பாக இருந்தன. விடுமுறை நாட்களில் வீட்டில் 'டிவி' பார்த்து முடங்கிய நாங்கள், தினமலரின் இந்த நிகழ்ச்சியால் அனைவரும் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தோம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் வரவேற்கத்தக்கது.- பி.லாவண்யா, குடியிருப்புவாசி.அடுக்குமாடி குடியிருப்பில் இதுபோன்று நடத்தப்படும் நிகழ்ச்சியால், மன இறுக்கம் குறைகிறது. குடியிருப்பில் உள்ள அனைவரும் ஒன்றாக பழகி, நட்பு கொள்ள வாய்ப்பாக அமைகிறது. என் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்ந்தேன்.- பி.பிரவீன், குடியிருப்புவாசி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை