சம்ப்பில் தவறி விழுந்து திருநின்றவூர் நபர் பலி
திருநின்றவூர்:திருநின்றவூர், ஸ்ரீனிவாசா நகரைச் சேர்ந்தவர் முனுசாமி, 55. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.நேற்று மதியம், வீட்டின் முன் கட்டப்பட்டு இருந்த 10 அடி உயர குடிநீர் தொட்டியில், 8 அடிக்கு நகராட்சி தண்ணீர் ஏற்றப்பட்டது. தண்ணீர் நிரம்பியதும், வால்வை மூட முனுசாமி தொட்டிக்குள் இறங்கிய போது, தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அவரது மகன், ராகவேந்தர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டார். தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.