| ADDED : டிச 27, 2025 05:45 AM
சென்னை: சென்னை அடுத்த பட்டாபிராம் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும், பள்ளி களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், திருவள்ளூர் மாவட்ட அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2025ம் ஆண்டிற்கான, தாகூர் - திருவள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், கடந்த வாரம் துவங்கின. பள்ளிகளுக்கு இடையிலான, 12 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் இப்போட்டியில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் நேற்று காலை நடந்த போட்டியில், திருவள்ளூர் மாவட்ட அணியும், காஞ்சிபுரம் மாவட்ட அணியும் பலப்பரீட்சை நடத்தின. முதலில் களமிறங்கிய திருவள்ளூர் மாவட்ட அணி, நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில், 8 விக்கெட் இழப்பிற்கு, 158 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய காஞ்சிபுரம் மாவட்ட அணி, 39.3 ஓவர்களில், 123 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மற்றொரு போட்டி யில், செங்கல்பட்டு மாவட்ட அணி 9 விக்கெட் வித்தியா சத்தில், திருவண்ணாமலை மாவட்ட அணியை வீழ்த்தியது.