உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நண்பரை வெட்டிய மூன்று பேர் கைது

நண்பரை வெட்டிய மூன்று பேர் கைது

ராஜமங்கலம்:வில்லிவாக்கம், தாதங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன், 32; ஆட்டோ ஓட்டுனர்.இவர், ஆறு மாதங்களுக்கு முன், பாஸ்கர், 22; ஜெய், 26; ஆனந்த், 25, ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியபோது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, பூபாலனை அவ்வப்போது, அவரது நண்பர்கள் மூவரும் மிரட்டி வந்துள்ளனர்.இந்நிலையில், கடந்த 3ம் தேதி இரவு 9:45 மணிக்கு, வீட்டின் வெளியே வந்த பூபாலனை, மூவரும் இணைந்து சரமாரியாக வெட்டினர்.உடலின் பல பாகங்களில் கடுமையான வெட்டு காயங்களுடன், அருகில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில், பூபாலன் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து, ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதன்படி, தலைமறைவாக இருந்த மூவரையும், போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து, பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ