உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெத் ஆம்பெட்டமைன் விற்க முயன்ற மூவர் கைது

மெத் ஆம்பெட்டமைன் விற்க முயன்ற மூவர் கைது

நந்தம்பாக்கம்,நந்தம்பாக்கம் பகுதியில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக, பரங்கிமலை துணை கமிஷனர் ஸ்ரீனிவாசனுக்கு தகவல் வந்தது.இதையடுத்து, அவரின் உத்தரவுப்படி, நந்தம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தலைமையில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், மணப்பாக்கம் பகுதியை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், மணப்பாக்கம், பாலம் அருகே காருடன் சந்தேகப்படும்படி நின்றிருந்த மூவரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து, தப்பியோட முயன்றனர்.அவர்களை பிடித்து சோதனையிட்டதில், மெத் ஆம்பெட்டமைன் எனும் போதைப் பொருள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது, நெற்குன்றத்தை சேர்ந்த பிரசாந்த், 24, ஆழ்வார்திருநகரை சேர்ந்த சஞ்சய், 20, சாலிகிராமத்தை சேர்ந்த யோகேஷ், 23, என தெரிந்தது.மூவரும் மெத் ஆம்பெட்டமைன் வாங்கி, சில்லரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த, 11 கிராம் மெத் ஆம்பெட்டமைன், சிறிய எடை இயந்திரம், மூன்று ஐபோன்கள் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.பின், மூவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை