மேலும் செய்திகள்
மீட்கப்பட்ட ரூ.200 கோடி நிலத்தில் சிறுவர் பூங்கா
1 minutes ago
சென்ட்ரல் - அரக்கோணம் இரவு ரயில் ஒரு பகுதி ரத்து
4 minutes ago
அகல் விளக்கு வழங்கிய பா.ஜ.,வினர்
5 minutes ago
பூக்கடை: கூலித்தொழிலாளியிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்த மூவரை, போலீசார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல், 27; கூலித்தொழிலாளி. இவர், கடந்த 30ம் தேதி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை அருகே, நடைபாதையில் துாங்கிக் கொண்டிருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள், நிர்மலிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அதற்கு பணம் இல்லை என கூறவே, அவரது பர்ஸை பறித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து, பூக்கடை போலீசார் விசாரித்தனர். இதில், செம்மஞ்சேரியைச் சேர்ந்த பரமேஸ்வரன், 26, அவரது மனைவி பிரியா, 23, வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்த ஜெகன், 26, என தெரிய வந்தது. இதில் பரமேஸ்வரன் மீது வழிப்பறி, திருட்டு உட்பட 16 வழக்குகளும், பிரியா மீது கொலை உட்பட மூன்று வழக்குகளும், இருப்பது தெரிந்தது. அவர்களிடமிருந்து ஆதார் அட்டை, பர்ஸ் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின், போலீசார் அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
1 minutes ago
4 minutes ago
5 minutes ago