மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற 3 பேர் கைது
03-Nov-2025
கிண்டி: கிண்டியில், மூன்று வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 6 கிலோ கஞ்சா மற்றும் 300 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கிண்டி தொழிற்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை, கிண்டி போலீசார் மடக்கி விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் போதைப் பொருட்கள் இருந்தன. அவர்களிடம் விசாரித்ததில், தி.நகரைச் சேர்ந்த சரண், 23; பரமேஸ்வரன், 21; சரவணன், 21; என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 6 கிலோ கஞ்சா மற்றும் 300 போதை மாத்திரை களை பறிமுதல் செய்தனர்.
03-Nov-2025