உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பழைய குற்றவாளிகள் மூவர் கைது

பழைய குற்றவாளிகள் மூவர் கைது

ஓட்டேரி கொளத்துார், சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் ஆனந்த், 30; பழைய குற்றவாளி. பெரம்பூர், அகரம், பேப்பர் மில்ஸ் சாலையைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 20.பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவரும், தலைமறைவாக இருந்து வந்தனர். தனிப்படை போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.இந்நிலையில், ஓட்டேரி போலீசார் இருவரையும் கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.அதேபோல், ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன், 28; பழைய குற்றவாளி. ஓட்டேரி போலீசார், நேற்று முன்தினம் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !