உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காஸ் கசிந்து தீ விபத்து காயமடைந்த மூவரும் பலி

காஸ் கசிந்து தீ விபத்து காயமடைந்த மூவரும் பலி

சென்னை,நுங்கம்பாக்கம், வைகுண்டபுரம், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் வீரக்குமார், 62; கூலி தொழிலாளி. அவரது மனைவி லட்சுமி, 57; வீட்டு வேலை செய்பவர்.கடந்த 4ம் தேதி, வீட்டில் சமையல் காஸ் சிலிண்டர் தீர்ந்துள்ளது. பின், புதிய சிலிண்டரை மாற்றியுள்ளார்.அப்போது, காஸ் கசிவாகி வீடு முழுக்க பரவி இருந்துள்ளது. இதை அறியாமல், பூஜை அறையில் விளக்கு ஏற்றிய லட்சுமி மீது தீப்பற்றியது.லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்து காப்பாற்ற முயன்ற வீரக்குமாரும், அவரது மருமகன் குணசேகரன், 45, என்பவரும் தீயில் சிக்கினர்.இதில், 70 சதவீதம் காயமடைந்த மூவரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மூவரும், நேற்று அடுத்தடுத்து உயிரிழந்தனர். நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ