உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொள்ளையடிக்க மூவர் முயற்சி நுாலிழையில் தப்பிய ரூ.2 லட்சம்

கொள்ளையடிக்க மூவர் முயற்சி நுாலிழையில் தப்பிய ரூ.2 லட்சம்

மணலி:மணலி தென்றல் நகரைச் சேர்ந்த அஜ்மல்கான், 30, மண்ணடியில் உள்ள மருந்தகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். வாரம்தோறும் கடையில் வசூலாகும் பணத்தை, டூ - வீலரில் வைத்து வீட்டு எடுத்து வருவார்; மறுநாள் வங்கியில் செலுத்திவிட்டு கடைக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, கடையில் இருந்த, இரண்டு லட்ச ரூபாயை, 'யமஹா ரே' இரு சக்கர வாகன இருக்கைக்கு கீழ் வைத்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.மணலி தென்றல் நகர் - பிரதான சாலையில் வரும்போது, அவருக்கு பின்னால், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர், அஜ்மல்கானை இடித்து கீழே தள்ளினர். அவருக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. அவர் எழுவதற்குள், மூவரும் அஜ்மல் கானின் இருசக்க வாகனத்தின் இருக்கையை திறந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். சுதாரித்த அஜ்மல்கான் கூச்சலிட்டதால் பொதுமக்கள் கூடவே, மர்ம நர்கள் தப்பினர். அப்போது அவர்கள் தவற விட்டுச் சென்ற பையில், கத்தி ஒன்று இருந்தது. காயமடைந்த அஜ்மல்கான், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அஜ்மல்கானின் நடவடிக்கைளை கண்காணித்து, கொள்ளை முயற்சி நடந்துள்ளது. மணலி போலீசார் வழக்கு பதிந்து, மூன்று மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை