தெருவிளக்கு கம்பத்தில் கார் மோதி பெண் உட்பட 3 பேர் படுகாயம்
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, மேற்கு கூவம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் விமலா, 31; கானா பாடகி. இவர், நேற்று முன்தினம் இரவு, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த அருண்குமார், 34, தேனாம்பேட்டையைச் சேர்ந்த சண்முகம், 40, ஆகியோரை, 'மாருதி சுஸுகி பலேனோ' காரில், அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு மெரினாவிற்கு சென்றுள்ளார்.மெரினா காமராஜர் சாலையில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோவில் அருகே சென்றபோது, விமலாவின் கட்டுப்பாட்டை இழந்த கார், தெருவிளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இதில், கார் ஓட்டிச் சென்ற விமலா உட்பட மூவரும் படுகாயமடைந்தனர். அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தில் காயமடைந்த மூவரையும் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.