மேலும் செய்திகள்
மளிகை கடையில் திருடியவர் கைது
04-Dec-2024
ஆலந்துார், :ஆலந்துார், பாளையத்தான் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த முருகன், 58. இவர், எம்.கே.என்., சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 13ம் தேதி, இவரது கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து, கல்லாப்பெட்டியில் இருந்த 50,000 ரூபாய், வங்கி காசோலை மற்றும் பொருட்களை, மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இது குறித்த புகாரின்படி, பரங்கிமலை போலீசார் விசாரித்தனர்.இதில், மடிப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார், 21, எழும்பூரைச் சேர்ந்த சந்தோஷ், 22, வாணுவம்பேட்டையைச் சேர்ந்த சாவித்திரி, 31, ஆகியோர், திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.அவர்களை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
04-Dec-2024