மேலும் செய்திகள்
போதை மாத்திரை வழக்கு மேலும் ஒருவர் கைது
27-Nov-2024
அயனாவரம், கஞ்சா போதையில் வீட்டிற்குள் புகுந்து, முன்விரோதத்தில் இளம் பெண்னை கத்தியால் வெட்டிய மூன்று ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.அயனாவரம், பி.இ., கோவில், வடக்கு மாடவீதியைச் சேர்ந்தவர் சுதாகர், 50, இவரது மனைவி நவமணி, 40. தம்பதிக்கு சுஹாசினி, 21, சுவாதி 25 என்ற மகள்கள் உள்ளனர்.கடந்த 10ம் தேதி இரவு, சுதாகர் வீட்டிற்குள் நுழைந்த மூன்று நபர்கள், கஞ்சா போதையில் தகராறு செய்து, கத்தியால் தாக்க முயன்றனர்.அதில், சுஹாசினி கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டதால், மூவரும் தப்பினர். காயமடைந்த சுஹாசினி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.இதுகுறித்து, அயனாவரம் போலீசார் வழக்கு பதிந்து, அயனாவரத்தைச் சேர்ந்த சக்திவேல், 26, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரவிபிரசாத், 26, அயிரம் விளக்கைச் சேர்ந்த சத்திய நாராயணன், 29 ஆகிய மூன்று ரவுடிகளையும், நேற்று முன்தினம் கைது செய்தனர்.விசாரணையில், அதேபகுதியில் வசிக்கும் சக்திவேலுவின் மனைவிக்கும், சுஹாசினிக்கும் இடையே இருந்த முன்விரோதத்தில், தாக்குதல் நடந்தது தெரிய வந்தது. கைதான மூவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
27-Nov-2024