மேலும் செய்திகள்
சோளிங்கரில் தை தெப்போற்சவம்
09-Feb-2025
திருவொற்றியூர்:திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவிலில், தைப்பூசத்தையொட்டி, ஆதிஷேச தீர்த்தக்குளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், உற்சவர் சந்திரசேகரர் - திரிபுர சுந்தரி தாயார் எழுந்தருளி, தெப்போற்சவம் நடப்பது வழக்கம்.அந்தவகையில், இந்தாண்டு தைப்பூச தெப்போற்சவம் 12ம் தேதி மாலை நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, கோவில் நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:தெப்போற்சவத்திற்கான ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இம்முறை பக்தர்கள் படிக்கட்டுகளில் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதி உண்டு.சுவாமியை தெப்பத்திற்கு கொண்டு செல்லும், 30 அடி துார படிக்கட்டு தவிர்த்து, நான்கு புறமும் மேல்பக்கம் உள்ள எட்டு படிக்கட்டுகளில் பக்தர்கள் அமர்ந்து, சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
09-Feb-2025