உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கன்னடபாளையம் ரேஷன் கடையில் டைல்ஸ் உடைந்து திடீர் பள்ளம்

கன்னடபாளையம் ரேஷன் கடையில் டைல்ஸ் உடைந்து திடீர் பள்ளம்

ஆவடி :ஆவடி அடுத்த கன்னடபாளையத்தில் உள்ள, 675 குடும்ப அட்டைதாரர்கள், வெள்ளானுார் ஊராட்சிக்கு உட்பட்ட சைதை வேளாண் விற்பனை கூட்டுறவு சங்கத்தில், ரேஷன் பொருட்கள் வாங்கி வந்தனர்.ஏற்கனவே, வெள்ளானுாரில் உள்ள ரேஷன் கடையில், 1,000க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இருப்பதால், பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.பயனாளிகளின் கோரிக்கையை அடுத்து, எம்.எல்.ஏ., நிதியில் இருந்து, 11.76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கன்னடபாளையம், அம்பேத்கர் சிலை அருகே, புதிய அமுதம் நியாய விலை கடை கட்டப்பட்டது.ஆனால், கடந்த மூன்று மாதங்களாக பயன்பாட்டிற்கு வராமல், பூட்டப்பட்டு இருந்தது. இதனால், பகுதிவாசிகள் தொடர்ந்து வெள்ளானுார் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வந்தனர்.கன்னடபாளையத்தில் உள்ள 675 ரேஷன் கார்டுகளுடன், கோவில்பதாகையில் உள்ள 167 ரேஷன் கார்டுகளை இணைத்து, மொத்தம் 842 கார்டுகளுடன், அமுதம் நியாய விலை கடை விரைவில் திறக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.நேற்று முன்தினம், ரேஷன் கடையில் பாமாயில் லோடு இறக்கிய போது, 10க்கும் மேற்பட்ட டைல்ஸ் கற்கள் உடைந்து, அரை அடிக்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.இது குறித்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இதையடுத்து, 'உடைந்த டைல்ஸ் கற்களை, உடனடியாக சீரமைக்க வேண்டும்' என, மாநகராட்சி தரப்பில் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ