உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தினமலர் எதிரொலி பெயர் பலகை அமைக்க ரூ. 5.56 கோடிக்கு டெண்டர்

தினமலர் எதிரொலி பெயர் பலகை அமைக்க ரூ. 5.56 கோடிக்கு டெண்டர்

தாம்பரம், நமது செய்தியின் எதிரொலியாக, தாம்பரம் மாநகராட்சியில் உள்ள, 70 வார்டுகளிலும், தெரு பெயர் பலகை அமைக்க, 5.56 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளதுதாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகள், பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், திருநீர்மலை பேருராட்சிகள் என, பத்து உள்ளாட்சிகளை இணைத்து, 2021, நவம்பர் மாதம், புதியதாக, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.மாநகராட்சி உருவாக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆகியும், 70 வார்டுகளில் உள்ள தெரு பெயர் பலகைகள் இதுவரை மாற்றப்படவில்லை. நகராட்சி, பேரூராட்சியின் போது வைக்கப்பட்ட பழைய பலகைகளே, பல பகுதிகளில் காணப்படுகின்றன என்று, சில நாட்களுக்கு முன், நமது நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது.இதையடுத்து, 70 வார்டுகளிலும், பெயர் பலகைகளை மாற்றியமைக்க, 5.56 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில், 2,500 புதிய பெயர் பலகைகள் பொருத்தப்பட உள்ளன. மேலும், ஏற்கனவே உள்ள, 2,300 பழைய பலகைகளை, பழைய ஸ்டிக்கரை எடுத்துவிட்டு புதிய ஸ்டிக்கர் பொருத்தப்பட உள்ளது. விரைவில், இதற்கான பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மண்டலம் புதிய பெயர் பலகை பழைய பெயர் பலகை1 600 5002 400 4003 500 4004 600 6005 400 400


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

G Sundaresan
ஜன 13, 2024 18:39

கழிவுநீர் செல்ல வழியில்லை பல இடங்களில். அதை சில லட்சங்கள் செலவு செய்து முதலில் மாற்றட்டும். தங்களின் நாளிதழில் தயவுசெய்து கழிவுநீர் பற்றி செய்தி வெளியிடுங்கள் விடிவு காலம் வரட்டும்.


Arul Narayanan
ஜன 13, 2024 10:47

தெரு பெயரா மாறி இருக்கிறது புதிய பலகை வைக்க? தட்டச்சு செலவு.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ