இன்று இனிதாக (04.10.2025)
ஆன்மிகம் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் புரட்டாசி திருவிழாவின் இரண்டாம் நாளில், அய்யா வைகுண்ட பரம்பொருள், காளை வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வருதல் - இரவு 8:00 மணி. இடம்: மணலிபுதுநகர். சீனிவாச பெருமாள் கோவில் கம்பராமாயண சொற்பொழிவு: தேரழுந்துார் புலவர் அரங்கநாதன் - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை. கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பிரதோஷ அபிஷேகம் - மாலை 5:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். ஆதிபுரீஸ்வரர் கோவில் பிரதோஷ அபிஷேகம் - மாலை 4:30 மணி. சுவாமி உள்புறப்பாடு - மாலை 6:45 மணி. இடம்: பள்ளிக்கரணை. ஓம் கந்தாஸ்ரமம் சகஸ்ரலிங்கத்துக்கு பிரதோஷ அபிஷேகம் - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். சித்தி விநாயகர் கோவில் மண்டல பூஜை - காலை 6:00 மணி. அலங்கார ஆராதனை - மாலை 6:00 மணி. இடம்: வேடந்தாங்கல் நகர், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். பொது ஐம்பெரும் விழா வாணிய செட்டியார் செயலி துவக்குதல். சட்டசபை கூடுதல் செயலர் வி.பூபாலனுக்கு பாராட்டு. ஆர்.கே.எஸ்., விருது வழங்கல், நுால் வெளியீடு, இணையதளம் அறிமுகம் - காலை 9:00 மணி. இடம்: மோட்சம் தியேட்டர் அருகில், பி.டி.ஆர்., திருமண மண்டபம், புரசைவாக்கம்.