உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக ....(14.09.2025) சென்னை

இன்று இனிதாக ....(14.09.2025) சென்னை

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் திருவாராதனம், காலை 6:15 மணி, நித்தியானுசந்தானம், மாலை 6:00 மணி, திருநடைக்காப்பு, இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில் அஷ்டமியை முன்னிட்டு, கபாலீஸ்வரர் சுவாமி அபிஷேகம், காலை 8:00 மணி. இடம்: மயிலாப்பூர். செல்வ விநாயகர் கோவில் 17ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, மாலை 6:00 மணி, இடம்: வில்லிவாக்கம். அர்க்கீஸ்வரர் கோவில் திருவாசகம் முற்றோதல் - காலை 8:00 முதல் 5:00 மணி வரை. இடம்: சக்தி சூரி அம்மன் கோவில், பம்மல்.- சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் -- காலை 7:00 மணி. மகா தீபாராதனை - காலை 8:00 மணி. இடம்: வேடந்தாங்கல் நகர், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். ஜெய் பிரத்யங்கிரா பீடம் 90வது தேய்பிறை அஷ்டமி நடுநிசி மிளகு ஹோமம் - இரவு 9:00 முதல் 2:00 மணி வரை. இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், செங்கல்பட்டு ரயில்வே கேட் வழி, வெங்கடாபுரம். உழவாரப்பணி தண்டீஸ்வரர் கோவிலில் உழவாரப் பணி, பங்கேற்பு: சுகுமாரன் குழுவினர் - காலை 8:00 மணி முதல். இடம்: வேளச்சேரி. இருதயாலீஸ்வரர் கோவில் பங்கேற்பு: திருநாவுக்கரசர் உழவாரப்பணி குழுவினர் - காலை 8:00 மணி முதல். இடம்: திருநின்றவூர். திருமாற்பேறு சிவன் கோவில் மு க்கட்செல்வன் உழவாரப் பணி மன்ற குழுவினர் - காலை 8:00 மணி முதல். இடம்: திருமால்பூர். நரசிம்ம பெருமாள் கோவில் உபன்யாசம்: கிருஷ்ண அவதாரம், சேங்காலிபுரம் பி.தாமோதர தீட்சிதர் -- மாலை 6:30 மணி. இடம்: பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோவில், ரகுநாதபுரம், மேற்கு சைதாப்பேட்டை. பொது கைவினைப் பொருள் விற்பனை வித்யாசாகர் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி நடத்தும், 'நம்ம பசங்க அங்காடி' - கைவினைப் பொருட்கள் விற்பனை நிகழ்ச்சி, காலை 11:00 மணி முதல். இடம்: வித்யாசாகர் பள்ளி வளாகம், ரஞ்சித் சாலை, கோட்டூர்புரம். கடற்கரையில் வாசிப்பு கடல் அலை ஓசையுடன் அமைதியான சூழலில், 'பெசி ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு - -காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: காஜ் ஸ்மித் மெமோரியல், பெசன்ட் நகர். மெட்ராஸ் தின உரை மெட்ராஸ் தின உரையில் அண்ணாநகர் குறித்து பேச்சாளர் வித்யா லட்சுமியின் பேச்சு- - மாலை 4:00 மணி. இடம்: விப்ஜியார் ஸ்பேஸ், அண்ணாநகர். திருப்புகழ் இன்னிசை திருப்புகழ் இன்னிசை: நவீன் வைத்யநாதன் குழுவினர் - மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை. பாரதியார் நினைவு நாள் விழா துாய்மை பணியாளர் ஆணைய முன்னாள் தலைவர் ம.வெங்கடேசன் தலைமையில், பிரகாஷ் ஜியின் 'ரவுத்திரம் பழகு' சொற்பொழிவு. மாலை 5:00 மணி. இடம்: டேக் ஆடிட்டோரியம், ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலை பள்ளி, தி.நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி