மேலும் செய்திகள்
120 நாட்களுக்கு பின் தக்காளி விலை உயர்வு
06-Jul-2025
கோயம்பேடு: வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்து, கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கோயம்பேடு சந்தைக்கு ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து உள்ளது. சென்னையை பொறுத்தவரை, தினமும் 1,300 டன் தக்காளி தேவை உள்ளது. ஆனால், நேற்று கோயம்பேடு சந்தைக்கு, 950 டன் தக்காளி மட்டுமே வந்தது. அதில், 700 டன் மட்டுமே முதல் தரம். இதையடுத்து, மொத்த விற்பனையில் கடந்த நாட்களில் 25 - 35 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி, நேற்று 50 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லரை விற்பனை யில், கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
06-Jul-2025