உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காசிமேடில் டன் கணக்கில் குப்பை கட்டணம் வசூலித்தும் பராமரிப்பில்லை

காசிமேடில் டன் கணக்கில் குப்பை கட்டணம் வசூலித்தும் பராமரிப்பில்லை

காசிமேடு, : காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 2,000 விசைப்படகுகள், 7,000 பைபர் படகுகள், 500 கட்டுமரங்களில், 30,000க்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழில் மேற்கொள்கின்றனர். தினமும் 200 டன் மீன் விற்பனைக்கு வருகிறது.காசிமேடு மீன்பிடி துறைமுக பைபர் படகு நிறுத்தும் பழைய வார்ப்பு தளம் கடல் பகுதியில், குப்பை, பிளாஸ்டிக், தெர்மாகோல் உள்ளிட்ட கழிவுகள், டன் கணக்கில் தேங்கி கிடக்கின்றன. இவற்றால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மீனவர்கள் கூறியதாவது:'பெஞ்சல்' புயல், மழையால் அடித்து வரப்பட்ட குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், பழைய வார்ப்பு தளத்தில் உள்ள கடல் பகுதியில் டன் கணக்கில் தேங்கியுள்ளன.இதுபோல், மெரினா உள்ளிட்ட கடற்கரையில் தேங்கிய குப்பை அகற்றப்பட்ட நிலையில், இங்கு மட்டும் அகற்றப்படவில்லை.புதிய வார்ப்பு தளத்தில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் துறைமுக பொறுப்பு கழகத்தினரும்; பழைய வார்ப்பு தளத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் ஐக்கிய சபையினரும்கூட, இக்குப்பையை அகற்றவில்லை.காசிமேடில் ஐக்கிய சபையினர், மீன், கருவாடு விற்பனை செய்வோர், வாகன கட்டணம் என, தினமும் 10,000 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். ஆனால் எந்தவித பராமரிப்பு பணிகளையும், சபையினர் மேற்கொள்வதில்லை. இதனால், காசிமேடு துறைமுகம் பராமரிப்பின்றி மோசமான நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. தொழில் செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி