உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டி.எம்.எஸ்.,சில் வாகன நெரிசல் போக்குவரத்து மாற்ற திட்டம்

டி.எம்.எஸ்.,சில் வாகன நெரிசல் போக்குவரத்து மாற்ற திட்டம்

சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, வாகன போக்குவரத்தில் சில மாற்றங்களை, போலீசார் அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:அண்ணா சாலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சிக்னல் இன்றி வாகனங்கள் எளிதாக கடந்து செல்லும்விதமாக, பல சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. சில நாட்களுக்கு முன் அண்ணா சாலை - ஜி.பி., சாலை சந்திப்பில் நெரிசலை குறைக்கும் விதமாக, எல்.ஐ.சி., அருகே 'யு - டர்ன்' வழங்கி போக்குவரத்து மாற்றப்பட்டது.இந்நிலையில், தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., - சிவசங்கரன் சாலை சந்திப்பில் உள்ள சிக்னலை மூடி, டி.எம்.எஸ்., பேருந்து நிறுத்தம் எதிரே 'யு - டர்ன்' வழங்க திட்டமிட்டு வருகிறோம்.ஏற்கனவே நெரிசலை குறைக்கும் விதமாக, அண்ணா அறிவாலயம் அருகே உள்ள சிக்னலை மூடியதால், தற்போது வாகனங்கள் எளிதாக கடந்து செல்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ