உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பைக்கு போன தெரு பெயர் பலகைகள்

குப்பைக்கு போன தெரு பெயர் பலகைகள்

கொளத்துார்,சென்னை மாநகராட்சி 6வது மண்டலமான திரு.வி.க.நகர், கொளத்துார் பகுதியில் தெரு பெயர் பலகைகள் மக்கள் பயன்படும் வகையில் இன்றி போஸ்டர் ஒட்டும் இடமாக பயன்பட்டு வருகிறது. 65வது வார்டு சாஸ்திரி நகர் உள்ளிட்ட பல இடங்களில் தெரு பெயர் பலகைகளில் பெயர் அழிந்துள்ளன. இந்நிலையில் ராஜேஸ்வரி நகரில் உள்ள சில தெரு பெயர் பலகைகளை அப்படியே குப்பை போல துாக்கி வீசியுள்ளனர். இதுகுறித்து பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த பலனும் இல்லை என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி