உடைந்து விழுந்த மரம் வாகனத்தில் சிக்கி போக்குவரத்து பாதிப்பு
ராயபுரம்: சரக்கு வாகனம் மோதியதில் உடைந்த மரம், வாகனத்தின் நடுவே சிக்கியதால், போக்குவரத்து பாதித்தது. நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சிவா, 40; ராயபுரம், மீனாட்சியம்மன் பேட்டையில் ‘டிரான்ஸ்போர்ட் மற்றும் ஸ்பீடு பார்சல் சர்வீஸ்ʼ நிறுவன வாகன ஓட்டுநர். ராயபுரம், ஆண்டியப்பன் கிராமணி தெரு வழியாக, ‘ஈச்சர்ʼ சரக்கு வாகனத்தை, நேற்று முன்தினம் ஓட்டிச் சென்றார். அப்போது, ஓட்டுநரின் கவன குறைவால், அங்கிருந்த ‘துாங்க மூஞ்சிʼ மரத்தின் மீது வாகனம் மோதியது. இதில் மரம் உடைந்து, லாரி கேபினட் பகுதிக்கும், பொருட்கள் ஏற்றும் பெட்டிக்கும் இடையே சிக்கியது. இதனால் வாகனத்தை இயக்க முடியாமல், அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. மாநகராட்சி ஊழியர்கள் வந்து, மரத்தை வெட்டி அகற்றினர்.