உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கழிவு நீரேற்று நிலையம் கிண்டியில் சோதனை ஓட்டம்

கழிவு நீரேற்று நிலையம் கிண்டியில் சோதனை ஓட்டம்

கிண்டி,:அடையாறு மண்டலம், 172வது வார்டு, கிண்டி, மடுவின்கரை தாழ்வான பகுதியாக உள்ளது. ஆலந்துார் பகுதியில் வடியும் மழைநீர், மடுவின்கரை வழியாக வேளச்சேரி ஏரியில் சேர்கிறது.மழைக்காலங்களில், மழைநீருடன், கழிவுநீர் கலந்து தெருக்களில் தேங்கி நிற்பதால், மடுவின்கரை, மசூதி காலனி பகுதி மக்கள், 15 ஆண்டுகளாக பல்வேறு சிரமங்களை அனுபவித்தனர்.இதற்கு தீர்வு காணும் வகையில், 3.27 கோடி ரூபாயில், 12 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய கழிவு நீரேற்று நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது.மசூதி காலனி, புதுத்தெருவில், 300 சதுர அடி பரப்பில், 2022ம் ஆண்டு நீரேற்று நிலையம் கட்டும் பணி துவங்கியது. இங்கிருந்து ராஜ்பவன் நீரேற்று நிலையம் வரை, 1.7 கி.மீ., துாரம் குழாய் பதிக்கப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்து, நவ., மாதம் சோதனை ஓட்டம் துவங்கியது.'மிக்ஜாம்' புயல் மழையில், 10 எச்.பி., மோட்டார் கொண்டு கழிவுநீரை வேகமாக வெளியேற்றியதால், மடுவின்கரையில் மழைநீர், கழிவுநீர் கலப்பு பிரச்னை ஏற்படவில்லை.சோதனை ஓட்டம் முடிந்ததும், முழு பயன்பாட்டுக்கு விட குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்வாயிலாக, 18 தெருக்களில் வசிக்கும், 35,000க்கும் மேற்பட்ட மக்கள் பயன் அடைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்