காலி மனையில் குப்பை கொட்ட வந்த லாரி பறிமுதல்
மணலிபுதுநகர்:மணலிபுதுநகர் அடுத்த இடையஞ்சாவடியில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை, உதவி பொறியாளர் சோமசுந்தரம், நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அங்குள்ள காலி மனையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் குப்பை கழிவுடன் நின்ற லாரியை மடக்கி ஓட்டுனரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். இதில் காலி மனையில் குப்பை கொட்ட வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, லாரியையும், ஓட்டுநர் சரவணன் என்பவரையும், மணலிபுதுநகர் போலீசில் ஒப்படைத்தனர்.அந்த லாரியில், 3,065 கிலோ குப்பை கழிவு இருந்தது.காலி இடத்தில், குப்பை கொட்ட வந்தவருக்கு, ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, செயற்பொறியாளர் தேவேந்திரன் தெரிவித்தார்.