கன்டெய்னர் லாரி மோதி த.வெ.க., நிர்வாகி பலி
பூந்தமல்லி, பூந்தமல்லி அருகே கோலப்பன்சேரி பகுதியை சேர்ந்தவர் கணபதி, 24; தனியார் ஊழியர். நடிகர் விஜய்யின் த.வெ.க.,வில் கோலப்பன்சேரி பகுதி நிர்வாகியாக இருந்தார்.நேற்று முன்தினம் இரவு, நடிகர் விஜய்யின் பிறந்த நாள் விழாவை கொண்டாடிவிட்டு, பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டு விட்டு, நண்பர் ராகுல் என்பவருடன், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில், பின்னால் அமர்ந்து சென்றார்.அப்போது மழை பெய்ததால், ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற ராகுல், திடீரென பிரேக் பிடித்து நிறுத்தினர். அதனால், ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருந்த கணபதி, நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி, கணபதி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கணபதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.