உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டி.வி.எஸ்., லுகாஸ் கிரிக்கெட் வீல்ஸ் இந்தியா சாம்பியன்

டி.வி.எஸ்., லுகாஸ் கிரிக்கெட் வீல்ஸ் இந்தியா சாம்பியன்

சென்னை, திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், டி.வி.எஸ்., லுகாஸ் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், ஆவடி அடுத்த பட்டாபிராமில் நடந்தன.போட்டியில், மொத்தம் எட்டு அணிகள் இரு பிரிவாக பிரித்து, தலா மூன்று ஆட்டங்கள் லீக் முறையில் மோதின. முன்னிலை பெற்ற தலா இரண்டு அணிகள் அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்தின.நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில், வீல்ஸ் இந்தியா - சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அணிகள் எதிர்கொண்டன.முதலில் பேட்டிங் செய்த, சென்னை பெட்ரோலியம் அணி, 27.4 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 109 ரன்களை அடித்தது. எதிர் அணியின் வீரர் சதீஷ் ஏழு விக்கெட் எடுத்து, 21 ரன்களை கொடுத்தார்.அடுத்து போட்டிங் செய்த, வீல்ஸ் இந்தியா அணி, 20.4 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 113 ரன்களை அடித்து, நான்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால், மூன்றாவது முறையாக வீல்ஸ் இந்தியா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை