மேலும் செய்திகள்
மனைவியை கொலை செய்து தலைமறைவான கணவர் கைது
27-Oct-2025
கே.கே.: வெவ்வேறு கொலை முயற்சி வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான இருவரை, போலீசார் கைது செய்தனர். விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லையில் நடந்த கொலை முயற்சி வழக்கில், கடந்த 2021ம் ஆண்டு, சிவராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து, கடந்த மாதம் 25ம் தேதி, நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்தது. அதன்படி, துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிவராமன், 25, என்பவரை, விருகம்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்தனர். அதேபோல், 2021ம் ஆண்டு, கே.கே., நகர் காவல் நிலைய எல்லையில் நடந்த கொலை முயற்சி வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான, அசோக் நகரை சேர்ந்த சரத்குமார், 29, என்பவரையும், கே.கே., நகர் போலீசார் கைது செய்தனர்.
27-Oct-2025