உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துாய்மை பணியாளரை தாக்கிய இருவர் கைது 

துாய்மை பணியாளரை தாக்கிய இருவர் கைது 

புளியந்தோப்பு கே.பி.பார்க்கை சேர்ந்தவர் மாதவன், 24; துாய்மைப் பணியாளரான இவர், கடந்த 26ம் தேதி மது அருந்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதி வாலிபர்கள் தகராறு செய்ததோடு, மாதவனை கல்லால் சரமாரியாக தாக்கினர். புளியந்தோப்பு போலீசார், பிரவீன் ராஜ் என்பவரை ஏற்கனவே கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த புளியந்தோப்பை சேர்ந்த மணிபிரசாத், 20, ராகுல்,19 ஆகிய இருவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை