உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தள்ளுவண்டி கடைக்காரரிடம் பணம் பறித்த இருவர் கைது

தள்ளுவண்டி கடைக்காரரிடம் பணம் பறித்த இருவர் கைது

திரு.வி.க.நகர், பெரம்பூர், ஏழுமலை தெருவைச் சேர்ந்தவர் அருண், 30. இவர், குமரன் நகர் பேருந்து நிலையம் அருகே, தள்ளுவண்டி கடையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் காலை கத்தியுடன் அங்கு வந்த இருவர், அருணை மிரட்டி 1,000 ரூபாய் பறித்து தப்பினர். இது குறித்து, திரு.வி.க., போலீசார் விசாரித்தனர். இதில், ஜவஹர் நகர், சுந்தரம் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன், 23, பெரம்பூர், செம்பியத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன், 35, ஆகியோர், பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.இதில், கமலக்கண்ணன் மீது திரு.வி.க., காவல் நிலையத்தில் இரண்டு கொலை உட்பட 18 வழக்குகள் உள்ளன. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி