உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதையில் ரகளை செய்தவர்களை ஆட்டோவால் மோதிய இருவர் கைது

போதையில் ரகளை செய்தவர்களை ஆட்டோவால் மோதிய இருவர் கைது

வேளச்சேரி,நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரகாஷ், 25, ராம், 22, செல்வகணபதி, 26. மூன்று பேரும், வேளச்சேரியில் உள்ள ஒரு துணிக்கடையில் பணிபுரிகின்றனர்.நேற்று முன்தினம் இரவு, ராமின் பிறந்த நாளை முன்னிட்டு, மூவரும் வேளச்சேரியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தினர்.பாரில் இருந்து வெளியே சென்ற போது, போதையில் மூவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டது. கைகலப்பில் ஈடுபட்ட அவர்களை, அதே பாரில் மது அருந்தி வெளியே வந்த இரு ஆட்டோ ஓட்டுநர்கள் விலக்கி விட்டனர்.இதற்கு மூவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஏற்பட்ட தகராறில், ஒரு ஆட்டோ ஓட்டுநர், கத்தியால் ராம், செல்வகணபதி ஆகிய இருவரையும் வெட்டினார்.மற்றொருவர், ஆட்டோவை வேகமாக ஓட்டிச் சென்று, பிரகாஷ் மீது மோதினார். இதில், அவரது கை எலும்பு முறிந்தது. மூவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வேளச்சேரி போலீசார், ஆட்டோ ஓட்டுநர்களான பள்ளிக்கரணையை சேர்ந்த பாலாஜி, 32, சுப்பிரமணியன், 30, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி