உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.10 லட்சம் நிலமோசடி இருவர் கைது

ரூ.10 லட்சம் நிலமோசடி இருவர் கைது

கொடுங்கையூர்: மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 52. இவருக்கு, நிலத்தரகர் செந்தில் மூலமாக, எட்வர்ட், ராமச்சந்திரன், ஜெயசீலன் ஆகியோர் பழக்கமாகி உள்ளனர். இவர்கள், 2024ல் திண்டிவனத்தில் 95 சென்ட் இடம் இருப்பதாக கூறி, இடத்தை காண்பித்து 1.50 கோடி ரூபாய் பேசியுள்ளனர். பின், முன்பணமாக 10 லட்சம் ரூபாய் பெற்று, கிரைய ஒப்பந்தம் செய்தனர். ஆவண நகல்களை முத்துக்குமார் சரிபார்த்தபோது, போலி என்பது தெரிய வந்தது. எழும்பூர் நீதிமன்ற உத்தரவின்படி, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, மோசடியில் ஈடுபட்ட கொடுங்கையூர், காந்தி நகரைச் சேர்ந்த எட்வர்ட், 52, மாதவரம், பால்பண்ணையைச் சேர்ந்த ஜெயசீலன், 57, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை