உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெத் ஆம்பெட்டமைன் வைத்திருந்த இருவர் கைது

மெத் ஆம்பெட்டமைன் வைத்திருந்த இருவர் கைது

மடிப்பாக்கம்:மடிப்பாக்கம், போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரவு தனிப்படையினரும், மடிப்பாக்கம் போலீசாரும், நேற்று முன்தினம் இரவு, மடிப்பாக்கம் சாலை சந்திப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, அங்கே நின்றிருந்த இருவரை விசாரித்ததில், மதுரையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான ரஞ்சித்குமார், 24, சூரக்கோட்டை தாலூகாவை சேர்ந்த கல்லுாரி மாணவரான விக்னேஷ்வரன், 22, என்பதும், அவர்களிடம் மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருள் இருப்பதும் தெரியவந்தது.பின், அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 7 கிராம் போதைப்பொருள், இரு மொபைல் போன்களை பறிமுதல் செய்து, பின் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை